பெரம்பலூர்: கல்லூரியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை! கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை!! போலீசார் விசாரணை!!

schedule
2026-05-22 | 10:37h
update
2026-05-22 | 10:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Female Student Commits Suicide by Hanging at College! College Declares 3-Day Holiday!! Police Investigation Underway!!

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே வல்லாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் (தந்தை ரோவர்) வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இதில் அரியலூர் மாவட்டம்> செந்துறையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகள் இளவரசி (20 ) இவர் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி அக்ரி 2ம் ஆண்டு படித்து வந்தார் . இந்நிலையில் மாணவி படித்துக் கொண்டிருக்கும் கல்லூரியில் உறவினர் மகன் தம்பி முறை கொண்ட நபர் கடந்த மாதம் மதுரைக்குச் சென்று இருந்த போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisement

அவரைப் பார்ப்பதற்கு பெற்றோர்களிடம் அனுமதி கேட்ட நிலையில் பெற்றோர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக அடிக்கடி பேசி மன அழுத்தத்தில் கல்லூரி மாணவி இளவரசி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு விடுதியில் உள்ள மாணவர்கள் சாப்பிடுவதற்காக கேண்டீன் செல்ல இளவரசி அழைத்துள்ளனர். அப்பொழுது அவர் நான் சற்று நேரம் கழித்து வருகிறேன் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சக மாணவிகள் இரவு உணவு சாப்பிட்டு விட்டு விடுதியில் தங்கள் அறைக்கு வந்து பார்த்தபோது அறையின் கதவு உள்தாழிடப்பட்டு இருந்த நிலையில் சக மாணவிகள் கதவைத் தட்டி திறக்குமாறு கூச்சலிட்டும் இளவரசியின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அரை கதவு திறக்காத நிலையில் உடனடியாக மாணவிகள் விடுதி வார்டன் தகவல் அளித்ததின் பெயரில் உடனடியாக எழுதி வாசல் கதவை உடைத்து உள்ளே திறந்து பார்த்த போது அறையில் மாணவி மின்விசிறியில் இளவரசி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனை அடுத்து அங்கு வந்த விடுதி காப்பாளர் இதனைக் கண்டு உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து பின்னர் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தூக்கில் தொங்கி கொண்டிருந்த இளவரசியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மாணவி இளவரசி தற்கொலை செய்து கொண்டது ஏன் எதற்காக என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர், வேளாண் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகள் இடையே பயத்தையும் பெரும் சோகத்தையும் ஏற்பட்டுள்ளது மேலும் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தினர் மாணவிகளின் பயத்தை போக்கும் வகையில் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்து கல்லூரிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.06.2026 - 16:38:43
Privacy-Data & cookie usage: