பெரம்பலூர்: முறத்தால் அடிக்கும் வாங்கும் திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் அடி வாங்கி சாமி வழிபாடு!

schedule
2026-06-05 | 15:11h
update
2026-06-05 | 15:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Festival featuring ritual beatings with winnowing baskets; thousands of devotees receive blows as part of their worship!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் அருள்மிகு திரவுபதி அம்மன் உடனுறை தர்மராஜா திருக்கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானதும், பல்வேறு பகுதி கிராம மக்களின் குலதெய்வமாகவும் விளங்கும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இத்திருக்கோவிலில் பஞ்ச பாண்டவர்கள் போற்றும் பிரம்மனால் வழிபட்ட ஊர் என கூறப்படுகிறது.

Advertisement

இத்திருக்கோவிலில் கடந்த 29 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அர்ச்சுனன் வில்வளைத்தல், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான “முறத்தால் அடிக்கும் விழா” இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவிலில் இருந்து பல்வேறு வேடமிட்டு மருளாளிகள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள ஏரிக்கரையில் அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், அதனையடுத்து வல்லாளகோட்டை இடித்து மருளாளிகள் “முறத்தால் பக்தர்களை அடிக்கும் “விநோத திருவிழாவும் இன்று நடைபெற்றது.

முறத்தால் அடி வாங்கினால் தீய சக்தி விலகும், நல்லது நடக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். விழாவில் காளி வேடம் அணிந்த மருளாளிகளிடம் முறத்தால் அடி வாங்கினால் குழந்தை பாக்கியம் கிட்டும், பேய், பில்லி சூனியம் பயம் தெளியவும், நினைத்த காரியம் நடக்கும் என்பதால் ஏராளமான ண்கள் உள்ளிட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளான பக்தர்கள் முறத்தால் அடி வாங்கினர், இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 15:16:47
Privacy-Data & cookie usage: