Perambalur: Final voter list released; There are 5,55,131 voters in Perambalur and Kunnam constituencies!
பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2026 நாளினை தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம், 2026 கடந்த 28.10.2025 அன்று துவங்கப்பட்டது. 652 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட 2277 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் மற்றும் இல்லம் தேடிக்கல்வி குழுவினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஊராட்சிகளின் கணினி இயக்குபவர்கள் என 783 தன்னார்வலர்களும் 105 சிறப்பு அலுவலர்களும் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,36,304 ஆண் வாக்காளர்களும் 1,44,235 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,80,566 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 148 குன்னம் சட்டமன்ற தொகுதியில் 1,28,817 ஆண் வாக்காளர்களும் 1,31,556 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,60,376 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,65,121 ஆண் வாக்காளர்களும் 2,75,791 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 5,40,942 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அதன் பின்னர் SIR-2026 இன் கோரிக்கை மற்றும் மறுப்புரை காலகட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 5033 ஆண் வாக்காளர்களும், 6071 பெண் வாக்காளர்களும், 1 மூன்றாம் பாலின வாக்காளரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அது போல் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3729 ஆண் வாக்காளர்களும், 4532 பெண் வாக்காளர்களும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1423 ஆண் வாக்காளர்களும், 1799 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 826 ஆண் வாக்காளர்களும், 1129 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,
தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,88,449 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,39,914 ஆண் வாக்காளர்களும், 1,48,507 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,71,634 ஆண் வாக்காளர்களும் 2,83,466 பெண் வாக்காளர்களும், 31 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 5,55,131 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்களர் பட்டியலை வெளியிட்ட போது, வருவாய் துறையினர், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் வக்கீல் தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கணேசன், உள்ளிட்ட கம்யூனிஸ்ட், திமுக சார்பில் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கவியரசன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.