பெரம்பலூர்: இறுதி வாக்காளர் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்படும்; கலெக்டர் தகவல்!

schedule
2026-02-19 | 14:31h
update
2026-02-19 | 14:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Final voter list to be published on Monday; Collector informs!

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கிடையே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பின்பு வாக்களார் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் உள்ளிட்ட பணிகளிலும் மேலும் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட இனங்களிலும் தகுதியான அனைத்து வாக்காளர்களும் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்கு உரிய அவகாசம் வழங்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

அதனை பின்பற்றிட கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், இந்திய தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாளை 6 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் நிமித்தமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 17.02.2026 அன்று வெளியிடப்பட வேண்டிய இறுதி வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 23.02.2026 திங்கள்கிழமை அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2026 - 05:40:53
Privacy-Data & cookie usage: