கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை மீட்ட பெரம்பலூர் தீயணைப்பு மீட்பு படையினர்!

schedule
2022-04-10 | 13:14h
update
2022-04-10 | 13:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur Fire and Rescue Force rescues farmer who fell into a well!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள எறையசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ் (48) விவசாயி. இன்று அவருக்கு சொந்தமான வயிலில் தண்ணீர் இறைந்து கொண்டிருந்ததார். அப்போது கிணற்றில் இருந்த நீர்மூழ்கி மோட்டாரில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து. விட்டு 50 அடி கிணற்றில் இருந்து மேலே ஏறும் போது 3 அடி தண்ணீர் மட்டும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அடிபட்டதால் மேலே ஏற முடியாமல் தவித்து வந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சிறப்பு நிலைய அலுவலர் ராமன் தலைமையில், வீரர்கள் த.ஜெகன், தீயணைப்பாளர்கள் பெ.ரவிக்குமார், கு.ராம்சிங், மு.மனோஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, கயிற்றின் மூலம் நாற்காலி முடிச்சை பயன்படுத்தி ரமேஷை மேலே கொண்டு வந்தனர். பின்னர், ஆசுவாசப்படுத்தி 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 15:06:17
Privacy-Data & cookie usage: