பெரம்பலூர்: மின்கசிவால் தீ விபத்து; எண்ணெய் ஆலையில் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்!

schedule
2025-09-04 | 08:56h
update
2025-09-04 | 08:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Fire due to electrical leakage; Goods worth 5 lakhs were damaged by fire in the oil plant!

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் ஆயில் மில்லில் இன்று காலை மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. எண்ணெய் ஆட்டும் செக்குகள் உள்ள பகுதியில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. அருகில் இருந்தவர்கள் இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இத்தீவிபத்தில் எண்ணெய் பாரல்கள் பெரிய அளவில் இருந்தால் தீ கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. வேப்பூர் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்

Advertisement

சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பெரம்பலூர் தீயணைப்பு அலுவலர் பழனிசாமி, சிறப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார், வேப்பூர் முன்னணி தீ அணைப்பாளர் தியாகராஜன், தீயணைப்பாளர்கள் சரண் சிங், தனபால், மனோஜ் குமார், வி பி சிங், விக்னேஷ், சிவா, பிரவீன். மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் புண்ணாக்கு, கடலை பருப்பு, எள் மற்றும் எண்ணெய் மற்றும் எண்ணெய் ஆட்டுவதற்கு பயன்படும் செக்குகள் உள்ளிட்ட சுமார் 5 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது‌. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் நடந்த இந்த தீ விபத்து அதிகாலை நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 01:35:52
Privacy-Data & cookie usage: