பெரம்பலூர்: ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் தீயணைப்பு விழிப்புணர்வு முகாம்!

schedule
2026-10-19 | 15:57h
update
2026-10-19 | 15:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Fire safety awareness camp at Almighty Vidyalaya Public School!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் பள்ளியின் சேர்மன் டாக்டர் ஆ. ராம்குமார் தலைமையில் கடந்த அக்.13 அன்று நடந்தது. பெரம்பலூர் தீயணைப்பு நிலைய உயர் அலுவலர் பழனிச்சாமி, தீயின் பல்வேறு வகைகள் பற்றியும் , தீ எவ்வாறு பரவுகின்றது என்பது பற்றியும், தீயை அணைப்பதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய முறைகள் பற்றியும் மாணவர்கள் முன்னிலையில் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்தார்.

Advertisement

தீ பரவுகின்ற பொழுது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பற்றியும், கவனிக்க வேண்டியவை எவை? எவை?, தீயணைக்கும் கருவியை பயன்படுத்தும் முறை பற்றியும், மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பொழுது காப்பாற்றும் முறைகள் , கேணியில் மனிதனோ மாடுகளோ விழுந்த பொழுது எந்தெந்த முறையில் காப்பாற்றுவது குறித்தும், துணைக் கருவிகளை கொண்டு வந்து விளக்கினர். பெரம்பலூர் மாவட்ட இளையோர் அலுவலர் விஜய் சூர்யா முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி முதல்வர் சாரதா வரவேற்றார். துணை முதல்வர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில் திரளான மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.10.2026 - 16:05:18
Privacy-Data & cookie usage: