பெரம்பலூர்: ரூ. 4.32 கோடியில் தீயணைப்பு நிலைய கட்டடம்; முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் திறந்து வைத்தார்!

schedule
2026-08-27 | 12:38h
update
2026-08-27 | 12:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Fire station building constructed at a cost of ₹4.32 crore; Chief Minister S. Joseph Vijay inaugurated it!

கடந்த திமுக ஆட்சியில் திட்டம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில், ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து, இன்று காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, கலெக்டர் ஷரண்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, லலித்குமார் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டார்.

Advertisement

இத்தீயணைப்பு நிலைய கட்டிடம் 11,366 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலைய கட்டிடத்தின் தரைதளத்தில் 6,241 சதுர அடி பரப்பளவில் 4 தீயணைப்பு வாகன நிறுத்துமிடமும் மற்றும் நிலைய அலுவலர் அறை, நிலைய போக்குவரத்து அலுவலர் அறை, கண்காணிப்பாளர் அறை, பொருள் வைப்பு அறை, ஆண்கள், பெண்கள் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. முதல் தளத்தில் 2,482 சதுர அடி பரப்பளவில் கூட்டரங்கம், 3 பணியாளர் ஓய்வு அறைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தளத்தில் 2,482 சதுர அடி பரப்பளவில் தீயணைப்பு மாவட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலர் அறை, உதவி மாவட்ட அலுவலர் அறை, ஓய்வு அறை, பொருள் வைப்பு அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் அமைந்துள்ளது. உதவி மாவட்ட அலுவலர் அறை, கழிவறை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று தளங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.

மும்முனை மின்சார வசதிகளுடன், மின் தடையின் போது பயன்படுத்த ஏதுவாக சோலார் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ்நிலை நீர் தேக்கத்தொட்டி 37,000 லிட்டர் கொள்ளளவிலும், மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி 16,000 லிட்டர் கொள்ளளவிலும் அமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் மின்விளக்கு வசதிகளுடன் கூடிய பேவர் பிளாக் சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது மற்றும் தீயணைப்பு குழாய் உலர்த்தும் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் அனுசுயா, சப் -கலெக்டர் மு.அனிதா, தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் (போக்குவரத்து) வீ.பழனிச்சாமி, உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.08.2026 - 13:03:54
Privacy-Data & cookie usage: