Perambalur: First Computerized Randomization for Officials Assigned to Vote Counting Duty; Held Under the Leadership of the Collector!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் மே.4. அன்று ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேசைகள், தபால் வாக்கு எண்ணுவதற்காக 4 மேசைகள், ராணுவ வீரர்கள் வாக்குகளை எண்ணுவதற்கு 1 மேசையும் அமைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும், 34 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 34 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 34 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 102 நபர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கான முதல் கணினி முறை குலுக்கல் நடைபெற்றது. மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்) உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.