பெரம்பலூரில் மீன்பிடி திருவிழா : போதுமான மீன் கிடைக்காமல் திரும்பிய மக்கள்

schedule
2017-01-24 | 10:23h
update
2026-06-08 | 00:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur fishing festival: fish returning unavailable people with disappointment

பெரம்பலூர் துரைமங்கலம் ஏரியில் இன்று மீன்பிடித் திருவிழா நடந்தது. அதில், பெரம்பலூர் துறைமங்கலம், நெடுவாசல், கல்பாடி, சிறுவாச்சூர், நொச்சியம், அரணாரை, அய்யலூர், வடக்குமாதவி, எளம்பலூர், அன்னமங்கலம், அம்மாபாளையம், செஞ்சேரி உள்ளிட்ட 20 மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர்.

Advertisement

பெரிய பெரிய மீன் கிடைக்கும் என நம்பி மீன்பிடி வலை, கத்தா உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் இறங்கிய பொதுமக்களுக்கு இந்த வறட்சி காரணமாக ஏரிக்கு தண்ணீர் வந்து நிறைந்து வழியாததால் புதிய மீன்கள் ஏரியை வந்தடையவில்லை. ஏரிக்குள் இருந்த நீரிலேயே வாழ்ந்து வந்த சிறிய நெத்திலி, அயிரை, குரவை, கெழுத்தி உள்ளிட்ட பல வகையான மீன்கள் எதிர்பார்த்த அளவு கிடைக்காமல், குறைந்த அளவே கிடைத்ததால் மீன்பிடிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்தடன் கரை திரும்பினர். 3 மீன்களே பெரிய மீன்கள் கிடைத்தன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 00:09:50
Privacy-Data & cookie usage: