பெரம்பலூர்: கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள்; போலீஸ் ஐ.ஜி. பேட்டி!

schedule
2026-01-24 | 16:25h
update
2026-01-24 | 16:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Five special teams formed to apprehend those who attempted to kill a prisoner by throwing a bomb; Police IG gives interview!

பெரம்பலூர்: போலீஸ் பாதுகாப்பில் இருந்த கைதியை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்ப்பட்டுள்ளதாக திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மதுரையை சேர்ந்த பிரபல ரவடி காளி @ வெள்ள காளி. இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் இடையில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இவரது தாத்தா வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த முன்விரோதத்தில் பழிபழிக்குப் பழியாக இருதரப்பிலும் உறவினர்களான 47 பேர் படுகொலை செய்யப்பட்டு வழக்குகள் நடந்த வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், காளி, மதுரை திருமங்கலத்தில் ஒருவரை கொலை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மேலும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜரான நிலையில், நீதிபதி உத்தரவின் பேரில், சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தவிட்டதன் பேரில், போலீசார் புதுக்கோட்டையில் இருந்து பாதுகாப்பாக திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். ரவுடி காளி உணவு சாப்பிடுவதற்காக திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்ட நிலையில், தீடீரென சினிமா போல் 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல் வெள்ளக்காளியை அரிவாளால் வெட்ட முற்பட்டனர். அப்போது, இதனை தடுக்க போலீஸாருக்கும், ரவுடி கும்பலுக்கும் இடையே மோதல் நடந்தது. அ அந்த ரவுடிகும்பல் தீடீரென நாட்டு வெடிகுண்டை வீசினர். இதனை அடுத்து போலீஸார் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுடமுற்பட்டதால் அந்த ரவுடி கும்பல் தலை தெறித்து தப்பி ஓடியது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார், தாக்குதல்களில் காயமடைந்த, , மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மருதபாண்டி, திருநெல்வேலி புளியங்குடியை சேர்ந்த விக்னேஸ்குமார், சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் உள்ளிட்ட போலீசார், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்ததுடன், அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி பாலக்கிருஷ்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், காயமடைந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 15 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

திருமாந்துறை சுங்கச்சாவடியை தடுப்புகள் மீது மோதிவிட்டு அதிவேகமாக செல்லும் தப்பி செல்லும் காட்சிகளும், அதனைத் தொடர்ந்து அதில் ஒரு கார் கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே கேட்பாடற்று சாலையோரம் நிற்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.01.2026 - 16:34:21
Privacy-Data & cookie usage: