பெரம்பலூர்: கனமழையால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது! சேதத்தை பார்வையிட்ட டி.ஆர்.ஓ!

schedule
2026-10-24 | 16:55h
update
2026-10-24 | 16:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Floodwaters enter homes due to heavy rain! DRO inspects the damage!

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள அயினாபுரம் கிராமத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால், மருதையாற்றுக்குச் செல்லும் அயினாபுரம் கிளை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஓடைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதியான அயினாபுரம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள 5 வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு மழை வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்த அங்கம்மாள் (60), லட்சுமி (40), அமுதா (45), ஆரஞ்சு (50), ரகு (46) ஆகியோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட 5 குடும்பத்தினரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். வருவாய் துறையினர் அவர்களுக்கு வேண்டியா பேரிடர் கால நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

Advertisement

இதையடுத்து டிஆர்ஓ கண்ணன் மழையினால் பாதிக்கப்பட்ட அயினாபுரம் பகுதியில் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர், மருதையாற்றில் அதிகளவு மழை வெள்ளம் வந்ததால் அயினாபுரம் – அணைப்பாடி செல்லும் சாலையில் ஓடைகளில் மழை நீரால் அடித்து வரப்பட்டுள்ள மணல் குவியலை அகற்றவும், கரை பகுதிகளை பலப்படுத்த என வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார். தாசில்தார் பாக்கியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் பிரவீணா, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.10.2026 - 17:00:19
Privacy-Data & cookie usage: