பெரம்பலூர்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்செரிதல் விழா; சங்குபேட்டை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம்!

schedule
2026-03-09 | 16:35h
update
2026-03-09 | 16:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Flower-laying ceremony at Samayapuram Mariamman Temple; Special puja and food distribution at Sangupettai Srimuthu Mariamman Temple!

Advertisement

பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயில் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்செரிதல் விழாவையொட்டி மாலை 6 மணிக்கு மகா தீபம், மற்றும் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி நேற்று அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாசி மாதக் கடைசியில் வரும் ஞாயிற்றுகிழமை தொடங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுகிழமை வரை 28 நாட்கள் பூச்செரிதல் விழா நடப்பது வழக்கம். அதனையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருகோயிலிருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு முதலாம் ஆண்டு பூச்செரிதல் விழா பெரம்பலூர் டவுன் சங்குபேட்டையிலிருந்து சாமியை மலர்கலாள் அலங்காரம் செய்து சங்குபேட்டை 19 வது வார்டு கிராம பொதுமக்கள், பக்தர்கள் தலைமையில் அம்மனுக்கு கூடை, கூடையாக பூக்களை பெரம்பலூர் சங்கு பேட்டையிலிருந்து புறப்பட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு பூக்களை தூவி சாமி தரிசனம் செய்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 16:44:06
Privacy-Data & cookie usage: