பெரம்பலூர்: தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலை தொடர்ந்து, கலெக்டரும் வாரச் சந்தையில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

schedule
2026-03-26 | 16:28h
update
2026-03-26 | 16:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Following Election Officer Sakthivel, the District Collector also conducts an awareness campaign regarding voting at the weekly market.

கடந்த மார்ச்.21ம் தேதி கொளக்காநத்தம் வாரச்சந்தையில் குன்னம் தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேல் , 18 வயது நிரம்பிய அனனவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை பாடாலூர் வாரச்சந்தையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ந.மிருணாளினி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை இன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குறிப்பாக கடந்த தேர்தல்களில் 70 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

சில வியாபாரிகள் தாங்கள் விற்பனைக்கு வைத்திருந்த காய்கறிகளை 100% VOTE என்ற வடிவில் அடுக்கி வைத்திருந்ததை பார்வையிட்ட கலெக்டர் மிருணாளினி வியாபாரிகளை பாராட்டினார். வருவாய்துறை பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

இந்த பிரச்சாரங்கள் பெரிய அளவில் ஜனநாயகத்திற்கு பயன் தரபோவதில்லை. அதிகாரிகளுக்கு ஒரு விளம்பரமாக இருக்கலாம். ஆனால், அரசியல் கட்சியினர் சிஸ்டமேட்டிக்காக 50 வாக்களர்களுக்கு ஒருவர் வீதம் நியமனம் செய்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், யார் பணம் வாங்குவார், யார் பணம் வாங்கமாட்டர், எந்த கட்சிக்கு ஓட்டு போடுவார் என விரல் நுனியில் தகவல்களை அரசியல்வாதிகள் வைத்துள்ளனர். மேலும், போட்டி வேட்பாளர்கள் கொடுக்கும் தொகை விட ரூ.500 கொடுக்க வேண்டுமா? அல்லது ஆயிரம் கொடுக்க வேண்டுமா என உத்திரவிற்காக காத்து உள்ளனர். பறிக்கும் படையினர் அப்பாவிகள் பணத்தை பறித்து கணக்குளை காட்டுகின்றனர். கடந்த தேர்தலின் போது வீடுவீடாக நள்ளிரவில் வீடுகளின் கதவைத் தட்டி ஓட்டுக்கு ரூ. 500 வீதம் கொடுத்த போது தேர்தல் ஆணையம் தூங்கி கொண்டிருந்தது. இந்த முறையும் அதேதான் நடக்கப்போகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 18:33:50
Privacy-Data & cookie usage: