பெரம்பலூர்: பாதயாத்திரை சென்ற 4 பேர் பலி எதிரொலி; ரிப்லெக்டர் ஜாக்கட் வழங்கி பகலில் பாதுகாப்பாக செல்ல போலீசார் அறிவுரை! பொதுமக்கள் பாராட்டு!!

schedule
2026-01-31 | 15:01h
update
2026-01-31 | 15:01h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Following the death of 4 people during a pilgrimage walk, police distribute reflector jackets and advise people to travel safely during the day! Public appreciate the initiative!!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற கடலூர், சேலம் மாவட்ட பக்தர்கள் கூட்டத்தில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் இன்று காலை கார் புகுந்ததில் 4 பேர் பலியாகினர். இந்நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை செல்கின்றனர். இதே போல வேளாங்கன்னிக்கும் செல்கின்றனர்.

Advertisement

இன்று காலை 4 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக, இன்று மாலை பெரம்பலூர் மாவட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு ரிப்லெக்டர் ஜாக்கட் வழங்கினர். பின்னர். சூரிய வெளிச்சத்தில் செல்லும்படியும், இரவுக்கு முன்பாக பாதுகாப்பான மண்டபம், பொதுமக்கள் அதிமுள்ள இடங்கள், கோயில், சத்திரம், சமுதாய கூடங்களில் தங்கி பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தினர். மேலும், பாதுகாப்பு மற்றும் அவசர உதவிகளுக்கு போலீசாரை தொடர்பு கொள்ளலாம் எனவும் எடுத்துரைத்தனர். போலீசாரின் இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.

உயிர் விலைமதிப்பற்றது. அது போனால் வராது, அதை யாராலும் கொடுக்க முடியாது. குடும்பத்தை நினைத்து பாதுகாப்பான பயணம் பக்தர்கள் மேற்கொள்வது நல்லது. ஒருவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்து சமூகத்தையும், அடுத்த தலைமுறையை பாதிக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.01.2026 - 15:25:10
Privacy-Data & cookie usage: