பெரம்பலூர்: விவசாயம் செழிக்க வேண்டுமானால் விவசாயி நாட்டை ஆள வேண்டும் பச்சை தமிழனான விவசாயி எடப்பாடி பழனிச்சாமி நாட்டை ஆள இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக் கோரிய அதிமுக வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்!

schedule
2026-04-12 | 02:41h
update
2026-04-12 | 02:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: “For agriculture to flourish, a farmer must govern the nation. To ensure that Edappadi Palaniswami—a farmer and a true son of the Tamil soil—rules the country, cast your vote for the ‘Two Leaves’ symbol!” urged AIADMK candidate Ilambai R. Tamilselvan.

சட்டமன்ற தேர்தல் வாக்கும் பதிவு நாள் நெருங்கி வரும் நிலையில் அரசியில் கட்சியினர் சூறாவளியாக சுழன்று தீவிர வாக்கு சேரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்குணம் அருமடல், பாலாம்பாடி, கல்பாடி, நெடுவாசல், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகால ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கை தன் கட்டுக்குள் வைத்து இருந்ததாகவும், அதனால் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்ததாகவும், ஆனால், தற்போதைய 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை கொல்லை கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து வருவதோடு சிறுவர்கள் கையில் கூட போதை பொருட்கள் சர்வ சாதரணமாக புழங்கும் அளவிற்கு அவல நிலையில் தமிழகம் உள்ளதாக தெரிவித்தார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ பச்சை தமிழனான விவசாயி எடப்பாடி பழனிச்சாமி நாட்டை ஆள இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார். முன்னதாக கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைப்பணிகளையும் குறிப்பிட்டு வாக்குகளை சேகரித்தார். அதிமுக ஆட்சிக்கு அமைந்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவி தொகை 10 ஆயிரம் வழங்கப்படும், அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும், நெல் உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு உற்பத்தியில் விவசாயிகளின் நலனுக்காக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500 என நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும்,

Advertisement

முதல் கட்ட வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு: அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை, ரூ. 25 ஆயிரம் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம், ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், அம்மா இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் இலவச வீடு கட்டித் தரப்படும் என்றும்,

இரண்டாம் கட்ட வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வாழ்வாதார உதவியாக வழங்கப்படும், ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடைந்த வீரர்களுக்கு 2 லட்சம் வழங்கப்படும். மாணவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும், முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் ஆக உயர்த்தப்படும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் மாடுபிடி வீரர்களின் குடும்பத்திற்கு தல ரூ.10 லட்சம் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகளுக்காக கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், சிறுபான்மை பெண்களுக்கு சுய தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும் .

3ம் கட்ட வாக்குறுதிகளாவன: +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். மீன்பிடி காலங்களில் வழங்க நிவாரணம் ரூ. 8 ஆயிரத்தில் இருந்து ரூ.12000 ஆக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டில் இருந்து 1400 ஆக வழங்க உயர்த்தப்படும். பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ. 1000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளருக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக அதிகரிக்கப்படும். நடைபாதை வியாபாரிகள் பெற்ற கூட்டு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து தீவிர பிரச்சாரம் செய்தார்.

 

பெரம்பலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை செழியன், மாவட்ட இணைசெயலாளர் ராணி, பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ்,புஷ்பராஜ், பெரம்பலூர் மாவட்ட ஐஜேகே தலைவர் அழகுவேல், முன்னாள் பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், பெரம்பலூர் மாவட்ட பாஜக துணைப் பொதுச் செயலாளர் உமா ஹைமாவதி,பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ராமசாமி, கீழக்கரை பன்னீர்செல்வம், எசனை பன்னீர்செல்வம், மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

எளம்பலூர் தண்ணீர்பந்தல், எம்.ஜி.ஆர். நகர், தீடீர் குப்பம், சமத்துவபுரம், வடக்குமாதவி, சோமண்டாபுதூர், மூலப்புதூர், நாவலூர், மேலப்புலியூர், லாடபுரம், சரவணபுரம், புதுஆத்தூர், செங்சேரி, சொக்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்குசேகரிப்பில் காலை முதல் இரவு வரை ஈடுபட்டார். அவருக்கு கிராமங்கள் தோறும் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.04.2026 - 08:54:59
Privacy-Data & cookie usage: