கனத்த இதயத்துடன் எழுதுகிறேன், 2020ல் கட்சியில் உறுப்பினராகி அண்ணன் அண்ணாமலைக்காக அரவக்குறிச்சியில் சட்டமன்றத் தேர்தல் களப்பணி செய்தேன். மும்மொழி கையெழுத்து இயக்கம் 4 லட்சம் கையெழுத்துக்கள். தமிழகம் முழுவதும் வெற்றிவேல் யாத்திரை ஆகியன சிறப்பாக செய்தேன்.கல்வியாளர் பிரிவில் மாவட்டத் தலைவராகி கடுமையாகக் களப்பணி செய்து பெரம்பலூரில் மற்றும் எனது கிராமத்தில் காவிக் கொடி பிடித்து ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக அனைத்து விதமான ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் மக்களுக்கான சமுதாயப்பணிகள் செய்தேன். எனது கடின உழைப்பையும் இளைஞர்களை அதிகமாக கட்சிக்கு ஈர்த்தமையையும் பார்த்து 6 மாதங்களில் எனக்கு பெரம்பலூர் மாவட்டத்தலைவர் பதவியை அண்ணன் அண்ணாமலை அவர்கள் வழங்கினார். 2021 முதல் 2025 வரை மாவட்டத் தலைவராக எனது கடுமையான பணியினை இன்னும் அதிகமாக்கி கட்சிக்கு முழு நேர உழைப்பைக் கொடுத்து கிராமம் கிராமமாக கட்சியை வளர்த்து இளைஞர்களை அதிகமாக ஈர்த்து 2024 பாராளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத்திலும் குன்னம் சட்டமன்றத்திலும் மிக அதிகமான வாக்குகளை எடுத்து அண்ணாமலை அவர்களுக்கும் கட்சிக்கும் மிகப்பெரிய பெருமையை தேடித்தந்தோம்.என்றும் அண்ணனின் வழியில் தீர்க்கமான அரசியல் பயணத்தில் பயணிப்போம் என்ற கருத்தின்படி நான் இப்போது வகிக்கும் மாநிலச்செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன். என்னுடன் அரசியலில் இத்தனை வருடங்கள் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…
என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதேபோல அவருடன் தொடர்ந்து இணைந்து பிஜேபியில் பணியாற்றி வந்த பெரம்பலூர் பிஜேபி மாவட்ட பொதுச் செயலாளர் உமா ஹேமாவதியும் அவருடன் இணைந்து மாவட்ட பொது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட பிஜேபியில் கட்சியை வளர்த்து மக்கள் மத்தியில் கட்சியை பேச வைத்த கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் கட்சியை விட்டு வெளியேறிய சம்பவம் பிஜேபி கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.