Perambalur: Former DMK District Secretary Kunnam C. Rajendran passes away; party members pay tribute under the leadership of Deputy General Secretary A. Raja, MP.
பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவரும், முன்னாள் வேப்பூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் வேப்பூர் ஒன்றிய துணைத் சேர்மனும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமான குன்னம் சி. இராஜேந்திரன்(72), உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது சொந்த ஊரான குன்னத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா. எம்.பி., கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா. ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், வழக்கறிஞர் என். ராஜேந்திரன், ரோவர் கல்வி நிறுவனங்கள் தலைவர் க. வரதராஜன், ஜான் அசோக், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.அண்ணாதுரை, பட்டுச்செல்லி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் டாக்டர் எஸ். டி. ஜெயலெட்சுமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து. ஆதவன், ஒன்றிய செயலாளர்கள் எம். ராஜ்குமார், செ. நல்லதம்பி, தி. மதியழகன், சி.ராஜேந்திரன், செ. வல்லபன், ஒன்றிய பொறுப்பாளர் அழகு. நீலமேகம், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சு. தங்கராசு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ. கார்மேகம், முன்னாள் வேப்பூர்
யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மா. பிரபாகரன், ஆர். அருண், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம் உள்ளிட்ட ஏராளமானோர் மறைந்த குன்னம் சி.ராஜேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.