பெரம்பலூர்: பெண்களுக்கான ஆரி எம்ப்ராய்டரி இலவச பயிற்சி!

schedule
2025-05-02 | 18:28h
update
2025-05-02 | 18:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free Aari embroidery training for women!

பெரம்பலூர் ஐஓபி – சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில், பெண்களுக்கான ஆரி எம்ப்ராய்டரி வரும் 16.05.2025ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் எம்பிராய்டரி அடிப்படை தையல் நுட்பங்கள், இழைகள் மற்றும் துணிகளுக்கு ஏற்ப நூல்கள் மற்றும் ஊசிகளை தேர்வு செய்தல் , டிரேசிங் டிசைன், தட்டை (FLAT)-ரன்னிங்-பின்-தண்டு-சாடின் தையல்கள், லூப் தையல் – செயின் தையல் – டெய்சி தையல், பட்டன் துளை தையல், போர்வை தையல்,துணி ஓவியம், வண்ண கலவை மற்றும் தூரிகைகள், ஷாடிங், விரல் ஓவியம், நிப் ஓவியம், தலையணை உறை, புடவை மற்றும் கதவு திரை, கைப்பை மற்றும் பணப்பையில் ஓவியம் வரைதல், ஸ்ப்ரே பிரிண்டிங் அறிமுகம், ஸ்ப்ரே பிரிண்டிங்கிற்கான கருவிகள், வண்ணப் பூச்சுகள் மற்றும் ரசாயனங்கள், வடிவமைப்பு மேம்பாடு, ஸ்ப்ரே பிரிண்டிங், ஃப்ரீ ஹேண்ட் முறை, ஸ்டென்சிலிங் முறை ஆகியவை சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்பட உள்ளது.

Advertisement

இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 31 நாட்கள் நடக்கும், பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் IOB வங்கியின் மாடியில் உள்ள IOB ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர்,வயது, விலாசம்,கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான் அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் ஃபோடோ இணைத்து, மே 15ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை, பெரம்பலூர் 621212 ,என்ற முகவரியிலோ அல்லது 04328277896 / 9488840328 தொலைப்பேசியிலோ அலுவலக நேரத்தில் (9.30AM to 5.30 PM) தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குனர் ஆனந்தி விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 02:38:41
Privacy-Data & cookie usage: