பெரம்பலூர்: 6ம் வகுப்பிலேயே இலவச சைக்கிள்களை வழங்க வேண்டும்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு, மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை!

schedule
2026-06-19 | 07:28h
update
2026-06-19 | 07:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free bicycles should be distributed as early as the 6th standard; students and parents make a request to Chief Minister Joseph Vijay!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அம்மையார் ஆட்சிகாலத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதனால், மாணவ, மாணவியர் பள்ளிக்குச் செல்ல போக்குவரத்துச் சிரமத்தைத் தவிர்ப்பதும், பெண் கல்வியை ஊக்குவிப்பதாக இருக்கிறது. இத்திட்டத்திற்கு மாணக்கர்கள் எங்கும் விண்ணப்பிக்காமல், அந்தந்த பள்ளியிலேயே தலைமை ஆசிரியர் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, இத்திட்டத்தில் 11ம் வகுப்பு இறுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படுவதால் 12ம் வகுப்பில் ஓராண்டு பயன்படுத்தி விட்டு கல்லூரிக்கு செல்கின்றனர். இலவச சைக்கிள்கள் முழுமையாக பயன்படுத்த முடியாமல் அதனை குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். மாணவர்கள் பலர் அதனை அப்படியே கைவிட்டுவிடுவதால் வீணாகுவதுடன், பழைய இரும்பு கடைகளுக்கும் எடைக்கு செல்கின்றன. எனவே, மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையிலும், திட்டத்தின் நோக்கம் 100 சதவீதம் நிறைவேறும் வகையிலும், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், முதலமைச்சர் ஜோசப் விஜயையின் குட்டி நண்பா நண்பீஸ்களுக்கு 6ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்க திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். தேர்தலின் போது அதிக வாக்குகளை பெற்றுத்தந்தவர்கள் பதின்ம வயது பள்ளி சிறுவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.06.2026 - 07:45:54
Privacy-Data & cookie usage: