பெரம்பலூர்: மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள்; கலெக்டர் தகவல்!

schedule
2026-02-04 | 10:45h
update
2026-02-04 | 10:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் TNPSC / TNUSRB போன்ற போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது SSC / RRB / BANKING போன்ற ஒன்றிய அரசு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் 16.02.2026 -ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

Advertisement

இந்திய ரயில்வே துறையில் 2026- ஆம் ஆண்டிற்கான GROUP –D அறிவிக்கையில் 21,997- காலிபணியிடங்கள் வெயிடப்பட்டுள்ளது இப்பணிக்கு 02.03.2026 வரை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் ITI பயின்றவர்கள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள். மேலும் ” மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் . மார்ச் மாத இறுதியில் SSC – CGL மற்றும் ஏப்ரல் மாதத்தில் SSC-CHSL தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் இந்த மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் SSC / RRB தேர்வு பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும்.மாதிரி தேர்வுகள் முடிந்தவுடன் வினாக்கள் குறித்து குழு விவாதம் மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும். போட்டித் தேர்வுகளுக்கு பயன்படும் தனித்துவ இணையதளமான Virtual Learning Portal–ல் போட்டித்தேர்வு ஆர்வலர்களுக்கு பதிவு செய்து தரப்படும். போட்டித் தேர்வு எழுதிட தேவையான அனைத்து பாட புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி. மத்திய அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். எனவே, ஆர்வம் உள்ளவர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.02.2026 - 11:07:06
Privacy-Data & cookie usage: