பெரம்பலூர்: சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்; கலெக்டர் தகவல்!

schedule
2025-04-24 | 02:29h
update
2025-04-24 | 02:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free coaching classes for Sub-Inspector exam; Collector information!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆண்டிற்கு 1,299 சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காலியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேர்வு நடைபெற உள்ளது. கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பு ஆகும். மேலும், விவரங்களை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் 30.04.2025 முதல் திறனறி பலகை மற்றும் காற்றோட்டமான வசதியுடன் கூடிய வகுப்பறைகளுடன், வாரத்தின் அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும், போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், பாடத்திட்டத்தின் படி அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்படும்.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த போட்டித் தேர்வு ஆர்வலர்கள் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பித்த நகல் , பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2, கல்வி சான்று மற்றும் ஆதார் அட்டை நகல்களுடன் 30.04.2025 அன்று நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990 55913 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு, கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 01:49:04
Privacy-Data & cookie usage: