பெரம்பலூர்: TNPSC GROUP 2

2 A போட்டித் தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்; கலெக்டர் தகவல்!

schedule
2025-07-22 | 15:33h
update
2025-07-22 | 15:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free coaching classes for TNPSC GROUP 2 & 2 A competitive exams to start from tomorrow; Collector’s information!

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது TNPSC GROUP 2 & 2A தேர்வில் சார்பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் போன்ற 600-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறவுள்ளது. மேலும், மத்திய அரசு / மாநில அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளின் போட்டித் தேர்வுகளுக்கான ஆட்சேர்ப்பு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும்

Advertisement

(LIC, AAO, IB, EPFO, ASST, COMMANDANT..,) பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதாரம், அறிவியல், அரசியல் அறிவியல்…) நுண்ணறிவு, திறனறிவு, காரணவியல், மொழி அறிவு (தமிழ்/ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் – தேர்விற்கும் TNPSC GROUP 2 & 2 A பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நாளை 23.07.2025 முதல் தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் திறனறி பலகை வசதியுடன் கூடிய வகுப்பறைகள், வாரத்தின் அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும், போட்டித் தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி உள்ளது, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை அணுகி தங்களை பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 94990 55913 என்ற அலுவலக அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 15:28:40
Privacy-Data & cookie usage: