பெரம்பலூர்: TNPSC GROUP IV

VAO தேர்விற்கு இலவச பயிற்சி; கலெக்டர் தகவல்!

schedule
2025-01-04 | 09:06h
update
2025-01-04 | 09:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free coaching for TNPSC GROUP IV / VAO exam; Collector information!

Advertisement

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தற்போது TNPSC GROUP IV / VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 8.01.2025 முதல் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இப்பயிற்சியில் திறனறி பலகை மற்றும் வசதியுடன் கூடிய வகுப்பறைகள், போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும், பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் எடுக்கப்படும். வாரத்தின் அனைத்து வேலைநாட்களிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த அறிய வாய்பிபனை வேலை நாடுநர்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 23:23:31
Privacy-Data & cookie usage: