பெரம்பலூர்: குன்னம் வேட்பாளர் சரண்யா வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 பேருக்கு இலவசக் கல்வி; மீண்டும் அறிவித்தார் பாரிவேந்தார்!

schedule
2026-03-31 | 20:07h
update
2026-03-31 | 20:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free education for 100 people per year if Kunnam candidate Saranya wins; Parivendhar announces again!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக ஐஜேகே-வை சேர்ந்த சரண்யா போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் அறிமுகக்கூட்டம் குன்னத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் (பச்சமுத்து) பேசியதாவது:

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில்தான் இந்திய ஜனநாயக கட்சி 2011 ல் ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உதவியால் கல்வி நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது. எங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளார். ஐஜேகே கடந்த 5 ஆண்டுகளுக்கு சேரக்கூடாத திமுக உடன் சேர்ந்து வெற்றி பெற்றோம். பின்னர், அங்கு சேர்ந்த பாவத்திற்காக காசிக்கு சென்று கங்கையில் மூழ்கி பாவத்தை கழித்து விட்டேன்.

தமிழர்கள் தமிழ் நாட்டை ஆளவேண்டும், விவசாயி மகன் ஆளவேண்டும் எங்கள் கட்சியின் கொள்கை. தெலுங்கர்கள் ஆளக்கூடாது. இந்த முறை இரட்டை இலை எங்கள் வேட்பாளர் சரண்யா நிற்கிறார். அவரை (அதிமுக) உங்களிடம் ஒப்படைக்கிறோம். அவரை சட்ட உறுப்பினராக வெற்றி பெறச் செய்யுங்கள். அவர் உங்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிப்பார். கூப்பிட்ட குரலுக்கு உங்கள் வீட்டு பிள்ளையாக ஓடி வருவார். நான் பெரம்பலூர் எம்.பியாக இருந்த போது வாக்குறுதி அளித்த படி செய்துள்ளேன். மேலும், ஆண்டுக்கு 300 பேர் வீதம் இலவசமாக கல்வியை அளித்துள்ளேன். அதே போல, குன்னத்தில் சரண்யாவை வெற்றி பெறச்செய்தால், இத்தொகுதி மக்களுக்கு ஆண்டுக்கு 100 பேருக்கு இலவச கல்வியை அளிப்பேன் என பேசினார்.

முன்னதாக, அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, அரியலூர் வேட்பாளர் தாமரை. எஸ்.ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் வரகூர் ஆ. அருணாசலம் உள்பட பாஜக, பாமக, தாமக, ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் வேட்பாளர்கள் சரண்யாவை வாழ்த்தி பேசினர். பெரம்பலூர் பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ், VGM @ வெங்கடாசலம், மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், ராஜேந்திரன், ரமேஷ், செல்வமணி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 20:18:32
Privacy-Data & cookie usage: