பெரம்பலூர்: ஆண்கள், பெண்களுக்கான பாஸ்ட் ஃபுட் தயாரிக்கும் இலவச பயிற்சி!

schedule
2025-08-08 | 08:31h
update
2025-08-08 | 08:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free fast food preparation training for men and women!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி பயிற்சி வரும் 11-08-2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா, கச்சோரி, கோபி மஞ்சூரியன், ஆனியன் பக்கோடா, சிக்கன் & வெஜிடபிள் பிரைட் ரைஸ், வெஜிடபிள் புலாவ், நூடுல்ஸ் வகைகள், வெஜ் மோமோஸ் ஆகிய உணவு பொருள்கள் எப்படி செய்வது என்பது பற்றி விரிவாக கற்றுத்தரப்பட இருக்கின்றது.

Advertisement

12 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதோடு, வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது AAY- குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் ஆதார் கார்டு, ரேசன் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான்கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 09-08-2025 தேதி மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்த பின்பு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை நேரிலோ அல்லது 04328277896, 9488840328 எண்கள் மூலமாக மூலமாக அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் வி.முருகையன் விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 21:35:19
Privacy-Data & cookie usage: