பெரம்பலூர் : ஆண், பெண் இருபாலருக்கும், இலவசமாக பாஸ்ட் புட் தயாரிக்கும் பயிற்சி!

schedule
2024-07-05 | 14:24h
update
2024-07-05 | 14:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free fast food training for both men and women!

பெரம்பலூர் ஐஓபி-யின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான துரித உணவுகள் தயாரித்தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சியில் பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி, சமோசா, கச்சோரி, கோபி மஞ்சூரியன், ஆனியன் பக்கோடா, சிக்கன் & வெஜிடபிள் பிரைட் ரைஸ், வெஜிடபிள் புலாவ், நூடுல்ஸ் வகைகள், வெஜ்மோமோஸ் ஆகிய உணவு பொருள்கள் எப்படி செய்வது பற்றி விரிவாக கற்றுத்தரப்பட உள்ளது.

Advertisement

இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 10 நாட்கள் நடக்கும். மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல்வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY- குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஆதார் கார்டு, குடும்பஅட்டை , பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ,வங்கி புத்தகம், பான்கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 10.07.2024 தேதி மாலை 5 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.08.2026 - 05:21:35
Privacy-Data & cookie usage: