பெரம்பலூர்: IOB

RSETI சார்பில் ஆண்களுக்கான இலவச இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி! மிஸ் பண்ணிடாதீங்க!! அப்புறம் வருத்தப்படுவீங்க!!

schedule
2025-06-30 | 15:42h
update
2025-06-30 | 15:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free light vehicle driving training for men on behalf of IOB – RSETI!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் இலகுரக வாகன ஓட்டுனர் பயிற்சி வரும் 02-07-2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 30 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும் பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவடைந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisement

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து 01-07-2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யலாம் என்றும், மேலும், விவரங்களுக்கு 04328-277896 என்ற எண்ணிலோ 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என பயிற்சி மைய இயக்குனர் முருகையன் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 02:33:40
Privacy-Data & cookie usage: