பெரம்பலூர்: அற்புதா மருத்துவமனையில் வயிற்று வலிக்கான இலவச மருத்துவ முகாம்! டாக்டர் சாமுவேல் தேவக்குமார் தகவல்!

schedule
2025-11-29 | 15:37h
update
2025-12-25 | 15:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free medical camp for stomach ache at Arputhaa Hospital! Information from Dr. Samuel Devakumar!

பெரம்பலூர் பாலக்கரை அருகே இயங்கி வரும அற்புதா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர். சாமுவேல் தேவக்குமார் தெரிவித்தாவது:

Advertisement

பெரம்பலூரில், கடந்த 21 வருடங்களாக மருத்துவ சேவையில் மக்களுக்கு மக்களின் ஆதரவுடன் சிறப்பாக அற்புதா மருத்துவமனை சேவை செய்து வருகிறது. வரும் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை வயிற்றுவலிக்கான இலவச மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில், வயிற்று வலி, வயிறு உப்புசம், சாப்பிட்டவுடன் வாந்தி எடுத்தல், கொஞ்சம் சாப்பிட்டவுடன் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வு, வயிற்றில் பந்து உருளுவது போன்ற உணர்வு, உணவு விழுங்குவதில் அடைப்பு இரத்த வாந்தி, நெஞ்சு எரிச்சல், புளிச்ச ஏப்பம் போன்ற அறிகுறிகள் இருந்தால் அதற்கான மருத்துவ ஆலோனைகள் வழங்கப்பட உள்ளது.

இம்முகாம் நாட்களில், மருத்துவர் ஆலோசனைகள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் & எண்டோஸ்கோப்பி இவை அனைத்தும் 50% சலுகையில் செய்யப்படும். உணவு குழாய் அடைப்பிற்கான சிகிச்சை வயிற்றுப் புண், சிறுகுடல் புண் இரைப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை, கணைய உறுப்பின் பிரச்சனைகளுக்கான சிகிச்சை, பித்தப்பை கற்கள் சிகிச்சை, பித்த நீர்ப்பாதை கற்களுக்கான சிகிச்சைகள் பெற்றுக் கொள்ள தகுந்த மருத்துவ வழிகாட்டல் செய்யப்படும் என்றும் முன்பதிவிற்கு, அற்புதா மருத்துவமனை நேரிலோ அல்லது 99948 98026, 88704 71934 88704 71933 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:52:38
Privacy-Data & cookie usage: