பெரம்பலூர்: ஆண்களுக்கு செல்போன் பழுதுநீக்கும் இலவச பயிற்சி ; IOB

RSETI வழங்குகிறது!

schedule
2025-01-04 | 12:02h
update
2025-01-04 | 12:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free mobile phone repair training for men; IOB – RSETI provides!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த ஆண்களுக்கான செல்போன் பழுதுநீக்குதல் குறித்த இலவச பயிற்சி IOB – RSETI மூலம் செல்போன் பழுது நீக்கல் பயிற்சி வரும் 20-01-2025 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 30 நாட்கள் நடக்கும், பயிற்சியில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் ஆனந்தியிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 18-01-2025 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் நேரில் பதிவு செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு IOB – RSETI , முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ் எளம்பலூர் சாலை என்ற முகவரியிலோ அல்லது 04328-277896, என்ற எண்ணிலோ 84890 65899, 94888 40328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 09:09:09
Privacy-Data & cookie usage: