பெரம்பலூர்: கிராம பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி!

schedule
2024-12-02 | 11:34h
update
2024-12-02 | 11:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free sewing training for village women!

model

பெரம்பலூர் ஐஓபி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் தையல்கலை பயிற்சி வரும் 06.12.2024 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட இருக்கிறது என மையத்தின் இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இப்பயிற்சி 30 நாட்கள் வழங்கப்படும். மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீரும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழும், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும் மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY / PHH – குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Advertisement

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள (IOB) கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை, பான்கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ, ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 04-12-2024 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்யவும், ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், முதல் தளம் சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ் எளம்பலூர் சாலை என்ற முகவரியிலோ அல்லது 04328-277896 என்ற தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.04.2026 - 18:59:57
Privacy-Data & cookie usage: