பெரம்பலூர்: கிராம பெண்களுக்கான டெய்லரிங் மற்றும் பியூட்டிசியன் இலவச பயிற்சி!

schedule
2026-03-26 | 15:53h
update
2026-03-26 | 15:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free Training in Tailoring and Beautician Skills for Rural Women!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான தையல் கலை மற்றும் அழகு கலை பயிற்சி வரும் வரும் ஏப். 6 முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

31 நாட்கள் தையற்பயிற்சியும், 35 நாட்கள் அழகு கலை பயிற்சியும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சி காலத்தில் பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடை, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பொருளாதார உதவி பெற சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

Advertisement

19 வயதுக்கு மேல் 50 வயதுக்குள், எழுத படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ் , பான் அட்டை, வறுமைக்கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோவுடன் இணைத்து ஏப்.5 மாலை 5.30 மணிக்குள் பயிற்சி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மார்ச். 27லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, பயிற்வசி மையத்தில் நேரிலோ அல்லது 8489065899, 9488840328 தொலைப்பேசிகள் மூலமாக அலுவலக நேரத்தில் (9.30AM to 5.30 PM) தொடர்பு கொள்ளலாம் என அம்மையத்தின் இயக்குநர் வி.முருகையன் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.04.2026 - 23:37:46
Privacy-Data & cookie usage: