பெரம்பலூர்: பிரிட்ஜ், ஏ.சி, வீட்டு வயரிங் ஆண்களுக்கு இலவச பயிற்சி!

schedule
2026-01-06 | 13:39h
update
2026-01-06 | 13:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free training for men in refrigerator, AC, and house wiring!

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான ரெப்ரிஜிரேசன் & ஏர் கண்டிஷன் மற்றும் ஹவுஸ் வயரிங் பயிற்சி சிறந்த வல்லுநர்கள் 90% தீவிர செயல் முறை பயிற்சியுடன் இலவசமாக கற்றுத் தரப்பட உள்ளது.

30 நாட்கள், இப்பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில், பயிற்சிக்கான உபகரணங்கள், சீருடை, புத்தகங்கள், மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும், நவீன தொழில்நுட்ப, உற்பத்தி பெருக்கம், விற்பனை செய்தல், தொழில் துவங்க, வங்கி கடன் உதவி பெற ஆலோசனைகள் வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும் மற்றும் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட,எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை அல்லது குடும்ப அட்டை எண் AAY or PHH-AAY அல்லது வறுமை கோட்டு எண் (BPL) அல்லது இலக்கு எண் (PIP) உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் மைய இயக்குனரிடம் தங்கள் ஆதார் கார்டு,குடும்ப அட்டை, நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், சாதி சான்றிதழ், பான் அட்டை, ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் போட்டோ உடன் நேரில் வந்து 09-01-2026 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவும், பின்பு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், பதிவு செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், முதல் தளம், எளம்பலூர் சாலை, பெரம்பலூர் 621212 என்ற முகவரியிலும், 8489065899, 9488840328 என்ற தொலைப்பேசி எண்களிலும் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 13:02:26
Privacy-Data & cookie usage: