பெரம்பலூர் : ஆண்களுக்கு வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கும் இலவச பயிற்சி!

schedule
2025-08-08 | 08:17h
update
2025-08-08 | 08:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free training for men in repairing household appliances!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐ.ஓ.பி-யின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் மூலம் ஆண்களுக்கான வீட்டு உபயோக மின் சாதனங்கள் பழுது நீக்கல் பயிற்சி வரும் ஆக.13- அன்று முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

இதில், மின்சாரத்தின் அடிப்படைகள், பழுது நீக்குதல் மற்றும் வயரிங் செய்வதற்கு தேவையான உபகரணங்கள், வீட்டில் முறையாக வயரிங் செய்தல், சிங்கிள் பேஸ் மோட்டார் ரீவைண்டிங் மற்றும் வீட்டிலுள்ள அத்தியாவசியமான மின் சாதனங்களான மின் விசிறி, மிக்சி, வெட் கிரைண்டர், ஹீட்டர்,அயன் பாக்ஸ், வாஷிங் மெஷின், இண்டக்சன் ஸ்டவ், வோல்ட்ஜ் ஸ்டெபிளைசர், ஏர் கூலர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின் சாதனங்களை சர்வீஸ் செய்வது மற்றும் அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்குவது விரிவாகவும் நேர்த்தியுடனும் சிறந்த வல்லுநர்கள் 90% தீவிர செயல் முறை பயிற்சியுடன் கற்றுதரப்பட உள்ளது.

Advertisement

30 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். அப்போது, மதிய உணவு மற்றும் காலை, மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி மையத்தில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் கார்டு, நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான் அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் போட்டோ இணைத்து 11-08-2025 ஆம் தேதிக்குள் நேரில் வந்து பதிவு செய்யவும், பின்பு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், விவரங்களுக்கு நேரிலோ அல்லது 04328277896 / 9488840328 என்ற எண்கள் மூலமாகவோ, அலுவலக நேரத்தில் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 08:11:39
Privacy-Data & cookie usage: