பெரம்பலூர்: ஆண்களுக்கு இலவச சிசிடிவி கேமரா, செக்யூரிட்டி அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பயிற்சிகள்!

schedule
2026-07-24 | 18:40h
update
2026-07-24 | 18:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free training for men on CCTV cameras, security alarms, and smoke detectors!

பெரம்பலூர் இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான சிசிடிவி கேமரா பிட்டிங், சர்வீஸ், செக்யூரிட்டி அலாரம் மற்றும் ஸ்மோக் டிடெக்டர் பயிற்சிகள் வரும் 10-08-2026 ஆம் தேதி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 13 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சியின் போது மதிய உணவு, காலை, மாலை டீ வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். தொழில் தொடங்க சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொடர்புடைய வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.

Advertisement

பயிற்சியில் சேர 19 வயதுக்கு மேல் 49 வயதுடையவராகவும் , எழுத படிக்க தெரிந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் / மாற்று சான்றிதழ், பான் கார்டு, வறுமைக் கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோவுடன் இணைத்து பெரம்பலூர் எளம்பலூர் சாலை, சுப்ரமணியம் வளாகத்தில் அமைந்துள்ள ஐஓபி வங்கியின் முதல் தளத்தில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பதிவு செய்து கொள்ளவும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் பயிற்சிக்கு அனுமதிக்கப்படும். 27-07-2026 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியிலோ அல்லது 9488840328 , 8489065899 என்ற தொலைப்பேசிகள் மூலமாக அலுவலக நேரத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30க்குள் தொடர்பு கொள்ளலாம், என அப்பயிற்சி மைய இயக்குனர் முருகையன் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.07.2026 - 19:20:38
Privacy-Data & cookie usage: