பெரம்பலூர்: IOB

RESTI சார்பில், செயற்கை நகைகள் தயாரிக்கும் இலவச பயிற்சி!

schedule
2025-04-16 | 16:08h
update
2025-04-16 | 16:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free training in making artificial jewelry on behalf of IOB – RESTI!

பெரம்பலூர் ஐஓபி-யின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் பெண்களுக்கான செயற்கை நகைகள் தயாரிக்கும் பயிற்சி வரும் 21.04.2025ஆம்தேதி முதல் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சியில் லெதர், உட், ஃபேப்ரிக், சீட் (SEEDS), ஷெல், ஸ்டொன், சில்க் திரட், டெரகோட்டா, ஃபுயுசன் வகை மோதிரம், நெக்லஸ், வளையல், மணிகள் ,செயின் டிசைனிங் ஆகியன செய்வது பற்றியும் அவற்றை பேக்கிங் செய்யும் முறை, அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்தல் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துதல் பற்றியும் சிறந்த வல்லுநர்களால் கற்று தரப்படும்.

14 நாட்கள், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இப்பயிற்சி நடக்கும். மதிய உணவு மற்றும் காலை, மாலை டீ இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்.

Advertisement

19 வயது முதல் 45 வயதுக்குபட்ட, எழுத படிக்கதெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் பான்கார்டு ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்ற பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது 04328277896 / 9488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என மையத்தின் இயக்குநர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 23:32:48
Privacy-Data & cookie usage: