RSETI சார்பில் ஆண்கள், பெண்களுக்கு இலவச போட்டோ பிரேமிங் லேமினேசன், ஸ்கிரீன் பிரிண்டிங், AI தொழில் நுட்ப பயிற்சி!
Perambalur: Free training in photo framing & lamination, screen printing, and AI technology for men and women, organized by IOB-RSETI!
காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும் இப்பயிற்சியின் போது மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 50 வயதுக்குபட்ட, எழுத படிக்க தெரிந்த சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கவேண்டும்.
ஆதார் அட்டை, வங்கி புத்தகம், சாதி சான்றிதழ் / மாற்றுசான்றிதழ் ,பான் அட்டை, வறுமைக்கோடு சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 ஸ்டாம்ப் சைஸ் போட்டோவுடன் இணைத்து எளம்பலூர் சாலைசுப்ரமணியம் வளாகத்தில் அமைந்துள்ள ஐஓபி வங்கியின் முதல் தளத்தில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் முன் பதிவு செய்து கொள்ளவும். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கு பெற்று பின் பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். 07-09-2026 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு ஐஓபி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், (RSETI) சுப்ரமணியம் காம்ப்ளக்ஸ், எளம்பலூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியிலோ அல்லது 8489065899/ 9488840328 தொலைப்பேசி மூலமாக தொடர்பு அலுவலக நேரத்தில் (9.30AM to 5.30 PM) கொள்ளலாம் என மையத்தின் இயக்குநர் வி. முருகையன் தெரிவித்துள்ளார்.