பெரம்பலூர்: ஆண்களுக்கு டூவீலர் மற்றும் ப்ரிட்ஜ் பழுது நீக்கும் இலவச பயிற்சி!

schedule
2025-08-11 | 16:33h
update
2025-08-11 | 16:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Free two-wheeler and bridge repair training for men!

பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் ஆண்களுக்கான டூவீலர் மற்றும் ப்ரிட்ஜ் பழுது நீக்ககும் பயிற்சி, சிறந்த வல்லுநர்களால் 90% தீவிர செயல் முறை பயிற்சியுடன் வரும் 25-08-2025 ஆம் தேதி முதல் இலவசமாக கற்று தரப்பட உள்ளது.

Advertisement

30 நாட்கள் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை,மாலை தேனீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க உதவி செய்யப்பபடும்.

19 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட, எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது AAY குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை உள்ள கிராமப்புற ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் IOB வங்கியின் மாடியில் உள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, நூறு நாள் வேலை அட்டை, வங்கி புத்தகம், பான் அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ் போர்ட் சைஸ் ஃபோட்டோ இணைத்து 23-08-2025 தேதி மாலை 5 மணிக்குள் நேரில் வந்து பதிவு செய்யவும், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு, பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு, நேரிலோ அல்லது 04328-277896, 9488840328 தொலைப்பேசி எண்கள் மூலமாக தொடர்பு கொள்ளலாம், என மையத்தின் இயக்குனர் வி.முருகையன் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 20:20:49
Privacy-Data & cookie usage: