பெரம்பலூர்: டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; பள்ளி மாணவி உள்பட 13 பேர் தீக்காயம்!

schedule
2026-08-11 | 13:37h
update
2026-08-11 | 14:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Gas cylinder explodes at tea shop; 12 people, including a schoolgirl, suffer burns!

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாச்சலம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இன்று மாலை டீக்கடையில் இருந்து கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வழியில் சென்றுக் கொண்டிருந்த 12 வயது பள்ளி மாணவி ஒருவர் உள்பட 13 பேர் மீது தீப்பற்றியது. இதைக்கண்டவர்கள் தீயணைத்து அவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயணைத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 பைக்குகள் தீப்பற்றி எரிந்து சேதமானது. இத்தீவிபத்தால் சற்று நேரம் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது. அரசு மருத்துவமனையில் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேரளி கிராமத்தை சேர்ந்த மித்ராஸ்ரீ என்ற பள்ளி மாணவி முதலுதவி சிகிச்சை அளிக்ப்பபட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 14:22:47
Privacy-Data & cookie usage: