Perambalur: Gas cylinder explosion at a tea shop – young man undergoing treatment dies! Demands raised to register a case against the cylinder company, provide compensation to the burn victims, and ensure life-saving treatment at private hospitals.
கடந்த ஆக. 11 அன்று மாலை 4.30 மணி அளவில், பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே அருணாச்சலம் என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் இருந்த கேஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் தீடிரென தீப்பிடித்து எரிந்தது. சிலிண்டரில் இருந்து வெளிவந்த கேஸ் தீப்பற்றி டீக்கடையை சுற்றி சுமார் 10 மீட்டர் தூரம் தீ ஜுவாலை பரவியது. இதில், கடையில் இருந்தவர்கள் அவ்வழியே சென்றவர்கள் என 2 பெண்கள் உள்பட 16 பேர் தீக் காயமடைந்தனர். இதைக் கண்டவர்கள் தீயணைத்து அவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 17 பைக்குகள் தீப்பற்றி எரிந்து சேதமானது. இத்தீவிபத்தால் அப்பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது.
களரம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன் விஜயகுமார் (47), ரஞ்சன்குடியை சேர்ந்த அல்லாஹ் பாஷா மகன் அமீர்கான் (51), கடையில் வேலை செய்த பெரம்பலூர் குறிஞ்சி நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி புவனேஸ்வரி (32), பெரம்பலூர் ரங்கா நகரை சேர்ந்த ராஜ் முஹம்மது மகன் அப்துல் ரகுமான் (35), மற்றும் முத்துக்ருப்பன் மகன் சகாதேவன் (53),பெரம்பலூர் அசோக் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சிவகுமார் (52), பெரம்பலூர் ரோஸ் நகரை சேர்ந்த காமராஜ் (63), வடக்கு மாதேவி ஏரிக்கரை ஆண்டி மகன் பழனிசாமி (52),கடையின் டீ மாஸ்டரான சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தினேஷ்(33), பொம்மனபாடியை சேர்ந்த மணிவண்ணன் மகன் மணிகண்டன் (42), பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியை சேர்ந்த மாணவியான பேரளி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் மித்ராஸ்ரீ (14), பெரம்பலூர் ஔவையார் தெருவை சேர்ந்த நல்லு மகன் சிவப்பிரகாசம் (58), கொட்டரை சேர்ந்த முத்துசாமி மகன் ஆறுமுகம் (50) உள்பட 16 தீக்காயம் அடைந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 87 சதவீதம் தீக்காயம் அடைந்த மணிகண்டன் (42) இன்று காலை 6.30 மணிக்கு சிகிச்சையின் போது உயிரிழந்தார். இன்னும் சிலர் வேதனையுடன் ஆபத்தான நிலையில் தீக்காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் நிறுவனத்தின் அலட்சியம் தான் என்றும், கேஸ் சிலிண்டரை உரிய காலத்தில் காலி சிலிண்டரை பரிசோதித்து அனுப்பும் முறையில் தவறுதல்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், கேஸ் சிலிண்டர் நிறுவனம் உரிய தீக்காயத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சூரன்சில் இருந்து உரிய இழப்பீடு வழங்குவதுடன், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவர்களுக்கு உயிர்காக்க உடனடியாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சிலிண்டர் நிறுவனங்கள் கேஸ் ரீ-ஃபில்லிங் செய்த உடன் உரிய பரிசோதனை செய்த பிறகே பொதுமக்கள் வினியோகத்திற்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். கேஸ் சிலிண்டர் நிறுவனத்தின் அலட்சிய போக்கால், டீ குடிக்க வந்தவர்களும், சாலை நடந்து சென்றவர்களும் தீவிபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருவது பரிதாபத்திற்கு உரியது.