பெரம்பலூர்; சிறுமி பாலியல் பலாத்காரம்; குற்றவாளிக்கு 20ஆண்டுகள் சிறை, ரூ. 50 ஆயிரம் அபராதம்: மகிளா கோர்ட் தீர்ப்பு!

schedule
2023-11-29 | 15:18h
update
2023-11-29 | 15:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur; Girl rape; 20 years imprisonment for the accused, Rs. 50 thousand fine: Mahila Court verdict!

பெரம்பலூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் கே. கே.நகரை சேர்ந்த வையாபுரி மகன் செல்வம்(45). என்பவர் கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமி ஒருவரை வலுக்கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வெளியே சொன்னால் கொலை செய்து செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து குற்றவாளி செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து செல்வம் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதி மன்றத்தில் நடந்து வந்தது.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) தனசேகரன் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செல்வத்திற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தும், குற்றவாளி சிறை தண்டனைகளை ஏகபோக காலத்தில் அனுபவிக்க வேண்டும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து குற்றவாளி செல்வத்தை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.08.2026 - 22:41:38
Privacy-Data & cookie usage: