பெரம்பலூர்: தங்க நகை மோசடி சம்பவம்; வங்கியை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்!

schedule
2025-11-28 | 07:29h
update
2025-11-28 | 15:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Gold jewellery fraud incident; Customers protest by besieging the bank!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் யூனியன் வங்கி ஆஃப் இந்தியா வங்கி கிளையில் அடமானம் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் நகை மதிப்பீட்டாளரால் கடந்த ஆண்டு மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக இதுவரை தங்க நகைகள் திருப்பித் தரப்படாமல் உள்ள நிலையில், தங்களுடைய நஷ்டத்தை ஈடு செய்யக் கோரி வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வங்கியின் முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். வங்கி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்களிடம் குன்னம் போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 11:57:40
Privacy-Data & cookie usage: