Perambalur Golden Gates Vidyashram students who one day become entrepreneurs!
பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியில் இளம் தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்பட்டது. இளம் தொழில் முனைவோர்களின், கோல்டன் கேட்ஸ் வணிக வளாகத்தை தொழிலதிபர் ஜெ.அரவிந்தன், பள்ளியின் தாளாளர் ரவிச்சந்திரன், செயலளர் அங்கயற்கண்ணி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்து முதல் விற்பனையைத் துவங்கி வைத்தார். இதில் பல்வேறு விதமான 67 அங்காடிகள் இடம் பெற்றிருந்தன. சிறுதானிய உணவு வகைகள், சைவ அசைவ, தந்தூரி உணவு வகைகள், பழச்சாறு , பழக்கலவை, பனிக்கூழ், எழுது பொருள் அங்காடிகள், ஓவிய பொருட்கள், விளையாட்டு பொருள் அங்காடிகள், திரையரங்கம், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
பள்ளி மாணவர்கள் வணிகம் மேற்கொள்வது எப்படி, தொழில் நடத்துவது எப்படி என்பது குறித்தும், ஒரு நாள் தொழிலதிபர்களாக அனுபவபூர்வமாக தெரிந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் பவித், பள்ளி ஒருங்கினைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர். பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாணவர்களின் உற்பத்தி படைப்புகளை ரசித்தனர்.