பெரம்பலூர்: மாணவர்களுக்காக அரசு பேருந்து வழித்தடம் நீட்டிப்பு!

schedule
2026-09-16 | 14:45h
update
2026-09-16 | 14:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Government bus route extended for students!

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே செங்குணம் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை கல்வி விரிவாக்க மையத்தில், கலெக்டர் ப.அப்துல் ராசிக், எம்.எல்.ஏ கி.சிவக்குமார் ஆகியோர் புதிய வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட நகர மற்றும் புறநகர் ஆகிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Advertisement

குன்னம் கிளையிலிருந்து தினந்தோறும் 001 ஏ என்ற வழித்தடத்தில் காலை 08.50 மணிக்கு பெரம்பலூர் முதல் என்.புதூர் வரை வாலிகண்டபுரம் வழியாக நகரப் பேருந்து ஒரு நடையும், பெரம்பலூர் கிளையின் மூலம் தினந்தோறும் 634 ஏ என்ற வழித்தடத்தில் மாலை 15.40 மணிக்கு லப்பைக்குடிக்காடு முதல் பெரம்பலூர் வரை வாலிகண்டபுரம் வழியாக புறநகரப் பேருந்து ஒரு நடையும் இயக்கப்பட்டுள்ளன. இந்த இரு நடைகளிலும் திருச்சி –சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை கல்வி விரிவாக்க மையத்தில் பயிலும் மாணவர்களின் பேருந்து வசதிகளுக்காக புதிய வழித்தட நீட்டிப்பு சேவையை தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள். பாரதிதாசன் பல்கலைக் கழக முதுநிலை கல்வி விரிவாக்க மையம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பணியாளளர்கள், தவெக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.09.2026 - 15:07:44
Privacy-Data & cookie usage: