Perambalur Government Polytechnic 2nd Year Direct Admission Notice!

GOVT Polytecnic Perambalur

2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 08.07.2022 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் (பொ) தெரிவித்துள்ளார்.

https://www.tnpoly.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்ளுக்கு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் – 621 104 என்ற முகவரியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணமாக ரூ.150- செலுத்தவேண்டும். மாணவர்கள் பதிவு கட்டணத்தை கிரிடிட், டெபிட் கார்டுகள், மற்றும் நெட் பேங்கிங் மூலமாக செலுத்தலாம். எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க மற்றும் சான்றிழ்களை பதிவேற்றம் 08.07.2022 (வெள்ளிக் கிழமை ) கடைசி நாள் கல்வி கட்டணம் இலவசம். சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சிக் கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 2200- ஆகும். மூன்று ஆண்டுகளில் பட்டயபடிப்பை ரூ.6600 -க்குள் படித்து முடித்துவிடலாம்.

முதலாமாண்டு பட்டயச் சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு (SSLC/Matriculation ) தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். நேரடி இரண்டாமாண்டு பட்டயச் சேர்க்கைக்கு மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இயற்பியல், கணிதம், வேதியியல், கணிப்பொறியியல், மின்னனுவியல், தகவல் தொடர்பு, உயிரியல், இன்பர்மேடிக்ஸ் பிராக்டிசஸ், பயோ-டெக்னாலஜி, டெக்னிகல் வொகேஷனல் சப்ஜக்ட், விவசாயம், பொறியியல் கிராபிக்ஸ், பிசினஸ் ஸ்டடிஸ், என்டல்ப்ரிநெர்ஷிப் (Entreprencurship) (ஏதேனும் மூன்று) அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

அமைப்பியல் துறை (Civil). இயந்திரவியல் துறை (Mechanical), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (ECE), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (EEE). கணிப்பொறியியல் துறை (Computer) உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேரலாம்.

இக்கல்லூரியில் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள்.ஸ்மார்ட் கிளாஸ் வசதி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், மாணவர்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவியர்களுக்கு கல்லூரிக்கு எதிரில் அரசு இலவச விடுதி., இருபாலருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை பெற்று வழங்குவது சிறப்பம்சமாகும். மேலும், மாணவியர்களுக்கு பிரகதி உதவித்தொகை, 2021-2022-ம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் பயின்றுக்கொண்டிருக்கும் 6 மாணவியர்கள் ரூ.50000- பிரகதி கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர்.

மீதமுள்ள ரூ.1,00,000- அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் உதவித்தொகை பெறவுள்ளனர். தகுதியுடைய மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்க்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச பேருந்து பயண அட்டை , வேலைவாய்ப்பு பிரிவின் மூலமாக மூன்றாமாண்டு இறுதியிலேயே வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

மாணவர் சேர்க்கை மற்றும் இணையவழியில் விண்ணப்பிப்பது தொடர்பக விவரங்கள் அறிய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி , கீழக்கணவாய், பெரம்பலூர்- 621 104 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04328 – 243200, 8056614377, 9994019207,8610933968, 9962488005, 9994333392, 9952787062, 9894985106 என்ற தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!