Perambalur Government Polytechnic Admission Extension: Annual Fee Rs. 2194, has free laptop, bus pass, hostel facility

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டம், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021ஆம் கல்வி ஆண்டின் முதலாமாண்டு பட்டய சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது. தற்பொழுது, மீதமுள்ள காலியிடங்கள் நிரப்பி கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைக்கபெற்றுள்ளதை தொடர்ந்து துணை கலந்தாய்விற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அக்.14 க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

துணை கலந்தாய்வு பற்றிய தகவல் தொலைப்பேசி வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். இக்கல்லூரியில் கல்வி கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2194- ஆகும். மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை, இலவச பஸ் பயணச் சலுகை இலவச மடிக்கணினி மற்றும் அரசு நல திட்டங்கள் அனைத்தையும் பெறலாம். மாணவியர்களுக்கு கல்லூரிக்கு அருகில் இலவச மகளிர் விடுதியும் மற்றும் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தினுள் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள மாணவ – மாணவியர்கள் விடுதியை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விபரங்களுக்கு 04328 – 243200 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!