பெரம்பலூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்; 983 பேர்களுக்கு ரூ.2.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் சிவசங்கர்!

schedule
2026-02-04 | 12:15h
update
2026-02-04 | 12:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Government welfare benefits provided for petitions received through the ‘Stalin with You’ scheme; Minister Sivashankar distributed welfare assistance worth Rs. 2.3 crore to 983 beneficiaries!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நடைபெற்ற 10 ஆயிரம் சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின்மீது உரிய நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

பெரம்பலூரில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி, சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரலையில் மக்களோடு மக்களாக பார்வையிட்டனர். பின்னர், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு முதற்கட்டமாக 983 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் தமிழ்நாடு அரசின் சேவைகள் அனைத்து தரப்பு பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் கிடைத்திடும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தை செயல்படுத்தினார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புறத்தில் நடைபெற்ற 86 முகாம்களில் 46,183 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இதில் 34,260 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Advertisement

இந்த முகாம்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகிய துறைகளின் சார்பில் 46 வகையான சேவைகள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் இந்த சேவைகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதன்படி வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 954 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 53 ஆயிரத்து 600 மதிப்பில் ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ. 52 ஆயிரத்து 760 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு அட்டைகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் வாகன கடன் உதவிக்கான ஆணைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் ஆடு வளர்க்க நிதி உதவித் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் ரூ. 2 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரத்து 360 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

டி.ஆர்.ஓ. கண்ணன், பி.டி. தேவநாதன், மாவட்ட திமுக பொறுப்பாளரும், அட்மா சேர்மனுமான வீ.ஜெகதீசன், ஆர்.டி.ஓ அனிதா, நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் பூலாம்பாடி பாக்கியலட்சுமி செங்குட்டுவன், குரும்பலூர் சங்கீதா ரமேஷ், அரும்பாவூர் ர.வள்ளியம்மை, நகராட்சித் துணைத் தலைவர் ஆதவன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், அழகு.நீலமேகம், நல்லத்தம்பி, பொதுக்குழு உறுப்பினர்கள், அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினருமான டி.ஆர். சிவசங்கர் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.02.2026 - 12:29:25
Privacy-Data & cookie usage: