பெரம்பலூர்: ஆல்மைட்டி வித்யாலாயா சி.பி.எஸ்.இ பள்ளியில் சீனியர் கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா!

schedule
2026-03-26 | 17:57h
update
2026-03-26 | 17:57h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Graduation Ceremony for Senior KG Students at Almighty Vidyalaya CBSE School!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியில் 26 .03. 2026 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சீனியர். கேஜி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார்.

விழாவில் மாணவ – மாணவியர்களின் சிற்றுரை, நடனம் , பட்டிமன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிககளை நிகழ்த்தி காட்டினர். தலைமை உரையாற்றிய தாளாளர் முனைவர் ஆ.ராம்குமார், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வர் சந்திரோதயம் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பள்ளியின் முதல்வர்கள் சாரதா, வித்யா, துணை முதல்வர் ராஜேந்திரன், மேல்நிலை ஒருங்கிணைப்பாளர் .ஹனிபா உள்பட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.04.2026 - 08:32:09
Privacy-Data & cookie usage: