பெரம்பலூர்: கிராமசபைக் கூட்டம்: கலெக்டர் கலந்து கொண்டார்!

schedule
2025-08-15 | 16:06h
update
2025-08-15 | 16:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Gram Sabha meeting: Collector attended

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் நடந்தது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலெக்டர் ச.அருண்ராஜ் கலந்து கொண்டார்.

Advertisement

இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), மகளிர் மேம்பாட்டு நிறுவனம், கிராமப்புற பண்ணை மற்றும் பண்ணை சாராத வாழ்வாதார நடவடிக்கைகள், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட பொருண்மைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊராட்சியின் வரவு செலவு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. ஊராட்சியில் நடைபெற்றுவரும் இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், இமயவர்மன், தாசில்தார் பாலசுப்ரணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 02:17:06
Privacy-Data & cookie usage: