பெரம்பலூர் மாவட்டத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்; கலெக்டர் தகவல்!

schedule
2026-06-03 | 17:58h
update
2026-06-03 | 17:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: Gram Sabha Meeting Held on the Occasion of World Environment Day; Collector Informs!

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், 05.06.2026 அன்று ”உலக சுற்றுச்சூழல் தினம்-2026” ‘Swachh Gaon, Surakshit Jaivau” (தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை) எனும் பிரச்சார இயக்கம் தொடர்பாக சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, ”காலநிலை நடவடிக்கை” என்ற கருப்பொருளுடன் ”உலக சுற்றுச்சூழல் தினம்-2026” ‘Swachh Gaon, Surakshit Jaivau” (தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை) எனும் பிரச்சார இயக்கம் தொடர்பான கூட்டப்பொருள் குறித்து விவாதிக்க வேண்டும். 05.06.2026 அன்று சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது சிறப்பு கிராம சபைக்கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். இச்சிறப்பு கிராம சபைக்கூட்டம் நல்லமுறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து வட்டாட்சியர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சிகளின் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு, கூட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் கிராம சபை உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதரபொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கலெக்டர் ஷரண்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 03:14:09
Privacy-Data & cookie usage: